பள்ளிகூடங்கள் திறந்ததும் என்ன செய்யலாம்?
பள்ளிக்கூடம் திறந்ததும் என்ன செய்யலாம் என்பதை ஆசிரியர்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?
திட்டமிட்டிருக்கும் வாய்ப்புகள் இல்லையென்றால் ஆசிரியர்களும் குழப்பத்திலும் மனநிலை பாதிப்பிலும் இருக்கிறார்கள் என்றாகிவிடும் தெளிவானது.
இடைநிலைப்பள்ளி தொடங்கியதும் மாணவர்களுக்கு பொறுப்பாக இருக்கமாட்டர்கள் . ஆதலால் முதல் இருநாட்கள் பாதுகாப்பு விளக்கம் சொல்கின்ற நேரமாகவே அமைய வேண்டும்.
இன்றைய மாணவர்கள் கொரோனா பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். ஆதலால் பள்ளியில் என்ன செய்யவேண்டும். பணி நெறியை எப்படி கையாளவேண்டும் என்றெல்லாம் விளக்கிச் சொல்கின்றவர்களாக இருக்கவேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்கிறார்களா? என்பதில் உண்மையான நிலவரம் தெரியவில்லை.
முதலில், ஆசிரியர்களுக்கு அரசின் பணிநெறி குறித்த முழுமையான அறிதலும், புரிதலும் வேண்டும். அதற்கான பயிற்சி இருக்கிறதா? என்பதுதான் பிரச்சினை.
மாணவர்களுக்கு பாதுகாப்பு பணிநெறி விளக்கப்படாவிட்டால் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். பள்ளி ஆசிரியர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் ஒருநாள் பயிற்சியில் கலந்துகொள்ள சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யலாம். கல்வித்துறை அதற்கான ஆதரவைத் தரவேவேண்டும்.