புதிய மாற்றம் பொறுப்பானது

மாற்றங்கள் நடைமுறையாக வந்துவிட்டன. கடைகளில் விவரங்கள் பதிவுமுறை கடைப்பிடிக்கப்படுகின்றன. அரசின் மருத்துவமுறை வணிகப்பகுதிகளில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நாட்டின் நடைமுறைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் மாற்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அல்லது மாற்றங்களோடு வாழப் பழகிக்கொண்டார்கள் என்றும் கூறலாம்.

மாற்றங்களில் சுகாதாரம் பேணப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. கடைகளில் இருக்கை இடைவெளி, வெளி மேசைகள் என்பதெல்லாம் போடப்படுவதில்லை.

அமலாக்க அதிகாரிகளால் செய்ய முடியாதவற்றை கோவிட் -19 செய்து கொடுத்திருக்கிறது. இது மாற்றமாக இல்லாமல் இதுதான் நடைமுறை என்று ஆகிவிடும் பழக்கம் வழக்கத்திற்கு வந்துவிட்டால் இடையூறுகள் இல்லாமல் போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here