உயர்திணை

பொது ஒன்று கூடல்கள் இல்லை. அதர்கான தளர்வுகல் இல்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். பலர் தங்கள் இல்லைங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கின்றனர். பலர் வண்ணம் பூசவும் முனைந்திருக்கிறனர்.

இந்த இடைவேளையில் சமூகத் தளங்களின் நிலை என்ன என்பதையும் எட்டிப் பார்ப்பது அனைத்து தரப்பினருக்கும் நன்மையாக இருக்கும்.

பலரின் பொதுவான கருத்துகள் எதிர்மறையாகவே இருக்கின்றன. பொதுஇடங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மக்களுக்கானது அல்ல, அதைப் பராமரிக்கும் பொறுப்பு பராமரிப்பு நிவாகத்தைப் பொறுத்தது என்ற தப்பான எண்ணத்தில்தான் அனைவரும் செயல்படுகின்றனர்.

பொது இடங்கள் மக்களின் வசதிக்கானவை. அந்த இடங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு என்று வரும்போது அவ்விடத்தைப் பராமரிக்கும் பொறுப்பு மக்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மக்களைச் சார்ந்ததுதான் என்பதை முதலில் உணர வேண்டாமா?

பொது இடத்தைப் பயன்படுத்துவத்ற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி. கொடுக்கின்ற கட்டணம் அந்த இடத்தின் பயன்பாட்டிற்காக மட்டுமே. பயன்படுத்தியபின் சுத்தப்படுத்தப்பட வேண்டிய பொறுப்பு பயனீட்டாளைர்களைப் பொறுத்தது என்று உணர மறுக்கின்றார்கள், அசுத்தப் படுத்தப்பட்டபின் யாரையோ அழைத்து சுத்தம் செய்யச் சொல்லும் போது, அமர்த்தப்படுகின்றவர் சுத்த உணர்வோடு அதைச் செய்யப்போவதில்லை. கிடைத்த காசுக்கு வேலை செய்துவிட்டுப்போனாவார். அவ்ரோடு பொறுப்பானவர்கலும் இணைந்து சுத்தப்படுத்த் வேண்டும். அதுதான் முறையான செயலும் கூட.

பொது இடங்களைப் பயன்படுதுகின்றவர்கள் பொதுமை நலம் கருதி அந்த இடத்தை சுத்தப்படுதுவது என்பது வேலையல்ல, கட்டாயமும் அல்ல. உயர்ந்த கடமை உணர்வு. மற்றவர்கள் என்பது மற்றவர்கள் அல்லர்.றாவர்களுள் நாமும் அடக்கம். அந்தச் சமுதாயத்தின் வட்டத்தில்தான் அனைவரும் இருக்கிறார்கள்.

உலக இயற்கைப் படைப்புகள் அதைத்தான் உணர்துகின்றன.

பணியில் இறங்கும்போது யாரும் வருவார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் சரியல்ல. கடமையில் இறங்கும்போது மற்றவர்களின் நெஞ்சை உறுத்தம். விசாரிக்க வருவார்கள். உண்மை அறிந்ததும் அவர்களும் இணைவார்கள். கூட்டம் இயல்பாகவே சேர்ந்துவிடும்.

எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். அந்தத்தொடக்கம் நாமாக இருந்தால் முன்னுதாரணம். பொது இடங்கள் சுகாதாரமாக இருந்தால் அது நமக்கானது. அதைப் பாதுகாப்பது. நம்பணியாக இருக்கவேண்டும். நாமௌம் இயற்கைதான். பிறப்பில் உயர்திணை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here