அதிகாலை வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

நாட்டின் எட்டு மாநிலங்களில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை 1.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,கெடாவின் சிக், பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு, பேராக்கின் உலு பேராக், கோலாகங்சார், கிந்தா, காம்பார், பத்தாங் பாடாங் மற்றும் முவாலிம், கிளாந்தானின் ஜெலி, தானா மேரா, மாச்சாங், பாசிர் பூத்தே, கோலா கிராய் மற்றும் குவா முசாங், திரெங்கானுவின் பெசூட் மற்றும் உலு திரெங்கானு, பகாங்கின் கேமரன் மலை, லிப்பிஸ், ரவுப், ஜெராண்டுட், பெந்தோங், தெமர்லோ, மரான், பெரா, பெக்கான் மற்றும் ரொம்பின், சிலாங்கூரின் உலு சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது:

மேலும் சரவாக்கின் ஸ்ரீ அமான் (லுபோக் அந்து), காபிட் (சோங், காபிட் மற்றும் பெலகா), பிந்துலு (தாதாவ் மற்றும் செபாவ்), மிரி மற்றும் லிம்பாங், சபா: சிபித்தாங், தெனோம், கோலா பென்யூ, பியூபர்ட், நபாவான், சண்டாக்கான் (தோங்கோட் மற்றும் தெலுபிட்), மற்றும் லாபுவானின் முழுப்பகுதி என்பனவும் அடங்கும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சாலைகளில் பயணிப்போர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பலத்த காற்றினால் மரங்கள் அல்லது விளம்பரப் பலகைகள் விழும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here