இனிப்பு இருக்கின்ற இடத்தத்தைத் தேடி ஈக்கள் போகும். எறுப்புகளும் படை எடுக்கும். அதுபோலத்தான் மலேசியத்தை நோக்கி ஊடுருவுகின்றவர்களாக கள்ளக்குடியேறிகள் இருக்கின்றனர்.
கள்ளக்குடியேறிகள் மலேசியாவையே அதிகம் தேர்வு செய்கின்றனர். ஏன்? இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதில், பலத்தை விட பலவீனமே தூக்கலாகத் தெரிகிறது என்று சொன்னாலும் பலவீனம்தான். நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்ள முடியுமா?
தவறு என்பது தவறு தானே! மலேசியர்கள் தவறிழைக்கின்றனர் என்றுதான் கூறவேண்டிருக்கிறது. கள்ளக்குடியேறிகள் உள்ளே நுழைவதற்கு மலேசியர்களே காரணம் என்பது பழைய கதை, அதே கதை இன்னும் தொடர்கிறது.
கள்ளக்குடியேறிகள் உள்ளே நுழைய ரகசிய பாதைகள் இருக்கின்றன. அதற்கான வழிகளை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள் மலேசியர்கள் என்ற தகவலும் இருக்கிறது. கடல் எல்லையில் மலேசியாவிற்குள் நுழைய கள்ளப்படகில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவற்றுக்கப்பால் கள்ளக்குடியேறிகள் மலேசியாவையே அதிகம் நாடுகின்றனர் என்பதற்கு எதுகாரணமாக இருக்கும்? என்பதும் புதிராகத்தான் இருக்கிறது. கள்ளக்குடியேறிகள் மலேசியாவிற்குள் நுழைவது புதிய விவகாரம் அல்ல. இது நீண்ட நாள் கதை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கபடாமல் இருக்கிறது.
கள்ளக்குடியேறிகளுக்குச் சரியான இடமாக மலேசியா இருக்கிறதென்றால் அவர்கள் உள்ளே நுழைவதற்கும் தங்குவதற்கும் சிறந்த இடமாக மலேசியா விளங்குகிறதா? அதுதான் உண்மை. உள்ளே நுழையும்போது, சிக்கினாலும் சிக்காவிட்டாலும் கொஞ்சம் சிரமம், கூடுதல் நன்மையும் அடைக்கலமும் கிடைத்துவிடுகிறது. இது ஒன்று போதுமே!
தாங்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து வேற்றிடம் செல்லவேண்டிய அவசியம் நியாயமானதாகவும் தெரியவில்லை. அண்டிப்பிழைக்க வேண்டியர்களால் தொல்லை என்றால் விரட்டத்தானே செய்வார்கள். அதுதான் நடந்திருக்க வேண்டும்.
அதே தவறுதான் சிலாங்கூர் மாநிலத்தின் செலாயாங் சந்தைப்பகுதியிலும் நடந்தது. இடம் கொடுத்தால் மடம் பிடுங்கும் கதை இது.
ஒளிந்து வாழ்வதற்கு சிறந்த இடமாக மலேசியாதான் சிறந்த இடமாக இருக்கிறது என்ற எண்ணம் கள்ளக்குடியேறிகளுக்கு ஏற்பட்டிருக்குமானால் அது மலேசியாவின் பலவீனமாகத்தான் இருக்கும்.