சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியில் இருந்து ஜூன் 2ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில், 3 இந்திய மாணவர்கள், தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வேறு 7 இந்திய மாணவர்களை அழைத்து வந்து பொழுது போக்கியதாக புகார் எழுந்தது.
இது, ஊரடங்கு கட்டுப்பாட்டுகளை மீறிய செயல் ஆகும். இவர்களில் 9 மாணவர்களுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம்வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மீதி உள்ள இந்திய மாணவி புல்லார் ஜஸ்டீனா (வயது 23) என்பவருக்கு நேற்று சிங்கப்பூர் கோர்ட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தது.
இதுபோல், ஊரடங்கின்போது, வெளியே சென்று தன்னுடைய ஆண் நண்பரை சந்தித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ரேணுகா ஆறுமுகம் (30) என்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.