கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த ’சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யா-ஜோதிகா தம்பதிகளின் மகளாக ஸ்ரேயா சர்மா என்ற அந்த குழந்தை நட்சத்திரம் செய்யும் சேட்டைகளும் குழந்தைத்தனமான இருந்ததாகவும் விமர்சகர்கள் தெரிவித்ததுண்டு.
இந்த நிலையில் இந்த படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘சில்லுன்னு ஒரு காதல்’ குட்டி பாப்பா ஸ்ரேயா சர்மா, தற்போது வளர்ந்து வழக்கறிஞராக மாறியுள்ளார். ஒரு பக்கம் வழக்கறிஞர் படிப்பு, இன்னொரு பக்கம் திரை உலகம் என மாறி மாறி இயங்கி வந்த ஸ்ரேயா சர்மா தற்போது முழுநேர வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.