மூன்று படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியீடு

அண்டாவ காணோம், வா டீல், மம்மி சேவ் மீ ஆகிய மூன்று படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஜே. சதீஷ் குமார் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளார்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனார். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ரேயா ரெட்டி நடித்த அண்டாவ காணோம், அருண் விஜய் நடித்த வா டீல், பிரியங்கா உபேந்திரா நடித்துள்ள மம்மி சேவ் மீ ஆகிய மூன்று படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஜே. சதீஷ் குமார் கூறியுள்ளார்.

மேலும் மூன்று பெரிய படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here