ஹுவாவெய் நிறுவனத்தின் மெங் வான்ட்சோ வழக்கில் அமெரிக்கா தவறாக வழிநடத்தியது

ஹுவாவெய் நிறுவனத் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சோ ஒப்படைப்பு வழக்கு, ஜுன் 15ஆம் தேதி திங்கள்கிழமை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

மெங் வான்ட்சொவின் வழக்கறிஞர்கள் குழு, இந்த உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ள குறிப்பாணை ஒன்றில், மெங் வான்ட்சோ மீதான குற்றச்சாட்டில் ஒரேயொரு முக்கிய சான்று, எச்.எஸ்.பி.சி வங்கியால் வழங்கப்பட்டதாகவும், இந்தச் சான்றின் தொகுப்பில் முக்கிய தகவல்களை பின்பற்ற தவறிய அமெரிக்க தரப்பு, வேண்டுமேன்றே தவறாக வழநடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், எச்.எஸ்.பி.சி. வங்கி, தன் சட்ட மீறல் காரணமாக, அமெரிக்க நீதி அமைச்சகத்திற்கு 190 கோடி டாலர் அபராதம் செலுத்தியதோடு, அமெரிக்காவுடன் வழக்கு ஒத்திவைப்புக்கான உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டது. 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ஆம் தேதி, மெங் வான்ட்சோ, எச்.எஸ்.பி.சி வங்கியின் தலைமை அதிகாரி ஒருவருக்கு பி.பி.டி வடிவில் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த பி.பி.டி ஆவணம், இவ்வங்கி வழியாக அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்கா வழங்கிய வழக்குப் பதிவில், எச்.எஸ்.பி.சி வங்கியின் இளம்நிலை ஊழியர்கள், ஹுவாவெய் மற்றும் ஸ்கைகாம் நிறுவனம் இடையேயான தொடர்பை அறிந்து கொண்டனர் என்றும், இவ்வங்கியின் மூத்த மேலாண்மையாளர்கள் இந்த தொடர்பை தெரிந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கூற்று நம்ப முடியாது என்று மெங் வான்ட்சோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃஎப்.பி.ஐ என அறியப்பட்ட அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிவிப்பில், கனடாவின் ஃபிபிடெரல் காவல்துறை மற்றும் எல்லைச் சேவை நிர்வாகம், வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் மெங் வான்ட்சோவை கைது செய்துள்ளது. இந்த கைது, அரசியல் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது என்று இந்தக் கைது நடவடக்கையில் பங்கேற்ற கடனாவின் ஃபிடெரல் காவல்துறைத் தேசிய பாதுகாப்புப் பிரிவு கைதுக்கு முன்பு மதிப்பிட்டு கருத்து தெரிவித்தது.

சட்ட நடைமுறையைத் தவறாக பயன்படுத்தல், ஆதாரங்கள் குறைவு ஆகிய காரணிகளைக் கருத்தில் கொண்டு, வழக்கு ஒப்படைப்பை நிறுத்த வேண்டும் என்று மெங் வான்ட்சோவின் வழக்கறிஞர்கள் குழு கோரியுள்ளது.

அன்று, நீதிமன்றத்தில், இந்த வழக்கு குறித்து எந்த தீர்ப்பும் அளிக்கப்படவில்லை. அடுத்து வரும் ஜுன் 23ஆம் நாள் இந்த வழக்குக் நீதிமன்றத்தில் தொடரும் என்று தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here