நாளை சூரியகிரகணம் – 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்

ஜூன் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. இதனால் 12 ராசிகளுக்கும் ஏற்படவிருக்கும் பலன்கள்

samayam tamil
ஜூன் 21ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. இதனால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்டப் பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் ஜோதிடர் சுஜித் மகாராஜ் விளக்கியுள்ளதைப் பார்ப்போம்.

சூரிய கிரகண பலன்கள்

samayam tamil

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை ஒரு சாதாரண வானவியல் நிகழ்வு என கூறுகின்றனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஜோதிட அடிப்படையில், ஒரு மனிதனை பாதிக்கக் கூடிய அல்லது நல்ல பலன்களைத் தரக் கூடிய அமைப்பாக பார்க்கின்றனர். பெரும்பாலும் கிரகணங்கள் தீங்கு விளைவிக்கக் கூடியதாக பார்க்கப்படுகிறது.

​மேஷம்

samayam tamil

மேஷம்

ராசிக்கு 3ம் இடமான மிதுனத்தில் ஏற்படுவதால் மிக நல்ல பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள். வேலை சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய முயற்சியைத் தொடங்கினால் நல்ல பலனை அனுபவிப்பீர்கள். உங்களின் ஆளுமை மேம்பட்டு உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். இந்த கிரகணத்தால் எந்த வகையில் தீமை ஏற்படாது. மேஷ ராசியினர் அனுமன் மந்திரத்தை சொல்வது நல்ல பலனைத் தரும்.

 

ரிஷப ராசி

samayam tamil

ரிஷப ராசி

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ரிஷப ராசியில் மூன்றாவதாக இருக்கக் கூடிய மிருகசீரிடம் 1,2 பாதங்கள் உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ரிஷப ராசியினர் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம், தொழிலில் சற்று நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கூடிய வரை புத்ய முயற்சிகள், முதலீடுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். மாமனார் வகையில் உதவி கிடைக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதால் நற்பலன் ஏற்படும்.

 

​மிதுனம்

samayam tamil

மிதுனம்

மிதுன ராசியில் இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால், குடும்பத்தில் சற்று சங்கடமான காலமாக இருக்கும். உறவுகளை சற்று அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அன்றைய தினம் பயணங்கள் தவிர்ப்பது மிகவும் அவசியம். இதனால் விபத்து அல்லது காயம்படுதலிலிருந்து தப்பிக்கலாம். இருப்பினும் எந்த ஒரு செயலைச் செய்தாலும் மிக கவனமாக இருப்பது அவசியம். விஷ்ணு சகஸ்ரநாமம் மந்திரத்தை படிப்பதால் பாதிப்பை குறைக்கலாம்.

 

​கடக ராசி

samayam tamil

கடக ராசி

சூரிய கிரகணத்தால் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உங்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் உதவிக் கரம் நீட்டுவர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அலுவலக / அரசாங்க பணிகள் நல்லபடியாக நிறைவேறும். இருப்பினும் கூட கடக ராசியினர் காயம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சற்று கவனமாக இருப்பது அவசியம். கடக ராசியினர் வெல்லம் தானம் கொடுப்பது நன்மையைத் தரும்.

 

​சிம்மம்

samayam tamil

சிம்மம்

சிம்ம ராசிக்கு மிக நல்ல பலன்களைத் தரக் கூடிய அமைப்பு இருக்கிறது. முன்னேற்றத்தை தரக் கூடிய உத்தியோக மற்றும் தொழில் அமைப்பு உண்டு. உங்கள் தந்தையை வணங்கி நல்லாசி வாங்கிக் கொள்வது நல்லது. பொருளாதார வகையில் முன்னேற்றம் ஏற்படும்.உறவினர்கள், நண்பர்களின் உறவு மேலும் வலுப்படும். உங்களுக்கு சில வகையில் அதிகாரம் கிடைக்கக் கூடும். காரிய சித்தி ஏற்படும். சிம்ம ராசியினர் தியானம் செய்தல், யோகா செய்வதால் நல்லருள் கூடும்.

 

​கன்னி

samayam tamil

கன்னி

கர்மா, தொழில் ஸ்தானத்தில் கிரகணம் நிகழ்வதால் தொழில் வகையில் நல்ல பலன்களும், லாபமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய அமைப்பு உண்டு. மாணவர்கள் கூடுதல் நற்பலன்களைப் பெறுவார்கள். ஸ்ரீசுக்ர மந்திரத்தை படிப்பதால் நற்பலன்கள் ஏற்படும்.

 

​துலாம்

samayam tamil

துலாம்

துலாம் ராசியினர் வேலை அல்லது உத்தியோகம் தொடர்பான சில சங்கடங்கள் அல்லது பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏழை எளியோருக்கு உணவு மற்றும் தண்ணீரை தானம் செய்ய வேண்டும். ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு பலமுறை சிந்திக்க வேண்டும். துலாம் ராசியினர் விவாதத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பேச்சை கட்டுப்படுத்துவது நன்று. ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் வியாபாரம் செய்யக் கூடியவராக இருந்தால், அவர்கள் லாபத்தைப் பெறுவார்கள்.

 

​விருச்சிக ராசி

samayam tamil

விருச்சிக ராசி

விருச்சிக ராசியைப் பொறுத்த வரையில் தங்கள் வேலையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், அவர்களின் திறமை அல்லது செயல் திறன், புது கருத்துக்கள் மூலம் நன்மை ஏற்படும். சூர்யா கிரகணத்தின் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க, விருச்சிக ராசியினர் பருப்புகளை தானம் செய்வதும், ஹனுமான் சாலிசாவை படிப்பது நல்லது.

 

​தனுசு

samayam tamil

தனுசு

வியாபாரம் செய்யும் தனுசு லாபம் பெறும். செல்வம் வருவதை அவர்கள் காண்பார்கள். இருப்பினும், அவர்களின் துணைக்கு சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, அவர்கள் கண்டிப்பாக ஆரண்யகந்த் பாதையைப் படிக்க வேண்டும்.

​மகரம்

samayam tamil

மகரம்

தொழில்முனைவோராக இருக்கும் மகர ராசியினர் நல்ல லாபம் பெற முடியும். முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும். மேலும் ஹனுமான் சாலிசா மந்திரத்தை படிப்பதன் மூலம், நீங்கள் உங்களின் நோய்களிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.

 

​கும்பம்

samayam tamil

கும்பம்

கும்ப ராசியினர் ஆன்மீக ஆனந்தத்தை அனுபவிப்பார்கள். மேலும் வியாபாரம் தொழிலில் இருப்பவர்கள் லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் அவர்கள் மனச்சோர்விலிருந்து விடுபடவும், மகிழ்ச்சியைப் பெற அனுமன் மந்திரங்களை பாராயணம் செய்வதும், எள் தானம் செய்வதன் மூலம் மிக நல்ல பலன்களைப் பெற முடியும்.

 

​மீனம்

samayam tamil

மீனம்

வேலைக்குச் செல்லும் நபர்கள் தங்கள் மேலதிகாரிகள் மற்றும் முதலாளிகளால் ஆதரிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் உடல்நலம் மீது கவனமாக இருப்பது அவசியம். மீன ராசியினர் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும், ஸ்ரீ மகாலட்சுமி மந்திரத்தையும் படிப்பதால் நல்ல பலன்களைப் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here