பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குடி போதையில் வாகனம் ஓட்டிய ஐவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கி சாலை தடுப்பு நடவடிக்கைகள் இன்று அதிகாலை 3 மணி வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 356 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் ஐவர் கைது செய்யப்பட்டனர். அதோடு பல்வேறு சாலை குற்றங்களுக்காக 36 சம்மன்களும் வெளியிடப்பட்டதாக அம்மாவட்ட ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.









