இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு தந்தையரின் பொறுப்பு சாதாரணமானதல்ல. ஒரு குடும்பத்தைக் கரைசேர்க்க தந்தை என்பவர் எவ்வளவு அரும்பாடுபடுகின்றார் என்பதை நாம் மறுக்க முடியாது என்று டத்தோ பிரகதிஷ்குமார் தெரிவித்தார்.
வாழ்க்கையில் பிள்ளைகள் முன்னேறுவதற்கு தந்தையர்கள் தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர். தங்கள் பிள்ளைகளைக் கரை சேர்த்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு கடைசி வரை உயிர் மூச்சாக இருக்கின்றனர்.
பிள்ளைகள் தன் தந்தையரிடத்தில் சேவைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். கடைசிக் காலங்களில் அவர்களை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நீங்கள் உங்கள் தந்தைக்கு என்ன செய்கிறீர்களோ அதைத்தான் உங்கள் பிள்ளைகள் கடைசிக் காலத்தில் உங்களுக்குச் செய்வார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
நாட்டில் உள்ள அனைத்துத் தந்தையர்களுக்கும் டத்தோ பிரகதிஷ்குமார் தனது தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.