இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் தாய்வான் நாட்டு உற்பத்தியாளரான விஸ்ட்ரன் இந்தியாவில் புதிய ஐபோனை உற்பத்தி செய்வதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்ய தொடங்கியது. எனினும், இதுவரை பழைய ஐபோன் மாடல்களே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள உதிரிபகாங்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்திடம் இருந்து புதிய ஐபோன் எஸ்இ மாடலுக்கு தேவையான பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய விஸ்ட்ரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி உதிரிபாகங்கள் ஜூலை மாதத்தில் இந்தியா வரும் என தெரிகிறது. இந்திய உற்பத்தி தொடர்பாக ஆப்பிள் மற்றும் விஸ்ட்ரன் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.