ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட இந்திய மாணவர் எண்ணிக்கை என்ன?

கல்வி அமைச்சின் ஒருமுகப்படுத்தப்பட்ட உயர் கல்வி மாணவர் சேர்ப்புத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளும் இந்திய மாணவர்களைச் சேர்ப்பதில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்ற விவகாரம் கடந்த சில வாரங்களாக சமுதாயத்தில் பெரும் பிரச்சினையாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திய மாணவர்களின் மற்றொரு முக்கிய கல்வி வாய்ப்பாக கருதப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இந்திய மாணவர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வி அமைச்சு மேற்கொள்ளும் கணிப்பீட்டின் அடிப்படையில்தான் ஆண்டுதோறும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.அவ்வகையில் நாட்டில் தற்போது செயல்படும் ஆறு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் புக்கிட் மெர்தாஜம் துவாங்கு பைனுன், ஈப்போ உலு கிந்தா, பகாங் துவாங்கு அஃப்ஸான் ஆகிய மூன்று ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் மட்டுமே தமிழ்ப்பள்ளி அல்லது தமிழ்க்கல்விக்கான மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை என்ன என்ற தகவலை சமுதாயம் அறிந்துகொள்ள விரும்புகிறது. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தேவையைவிட குறைவான மாணவர்களே தமிழ்ப்பள்ளி ( தமிழ்க்கல்வி ) களுக்கான ஆசிரியர் பயற்சிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் 350௦ லிருந்து 400௦௦ வரை மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிக்குத் தேவைப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையே குறையுமானால் நேர்காணலில் தோல்வி காண்போர், தேர்வானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளாமல் மற்ற பயிற்சிகளைத் தேர்வு செய்வோர், ஆறாம் படிவத்தைத் தொடர்வோர் என்று கல்லூரிக்குச் செல்வோரின் எண்ணிக்கை மேலும் குறையும்.

உதாரணத்திற்கு 350௦ மாணவர்கள் தேவைப்படும் இடத்தில் 300௦௦ மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்களேயானால் மேற்குறிப்பிட்ட காரணங்களால் கழிக்கப்பட்டு பயிற்சியில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 200 முதல் 250௦ ஆக மட்டும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.இத்தகைய சூழ்நிலைகளில் கடந்த காலங்களில் இரண்டாவது நிலைத் தேர்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மீதமுள்ள இடங்களுக்கு மாணவர்கள் நிரப்பப்படுவார்கள்.

இந்நிலையில் 2020/2021 க்கான கல்வி ஆண்டில் நமது மாணவர்களின் நிலை என்ன என்பதை கல்வி அமைச்சு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here