4 குடும்ப உறுப்பிர்களை பாராங்கால் வெட்டிய ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்

ஜோகூரில் உள்ள ஒரு வீட்டில் நோன்பு துறக்கும் போது நான்கு குடும்ப உறுப்பினர்களை பராங்கால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோத்தா திங்கி  மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹுசின் ஜமோரா, அந்த நபர் 38 வயதான ஆதி ஹாஷிம் என்றும் அவர் அன்னாசிப் பண்ணையில் பணிபுரிந்தவர் என்றும், அவரின் கடைசி முகவரி 1003, பிளாக் 12, ஃபெல்டா ஆயர் தவார் 3 என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

தாக்குதல் தொடர்பான விசாரணையில் தேடப்படும் ஆதி ஹாஷிம் (38) என்பவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கோத்தா டிங்கி, கம்போங் செடிலி கிச்சிலில் உள்ள வீட்டில் இரவு 7.11 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் சந்தேக நபரின் மனைவி, மாமியார், மைத்துனர் மற்றும் மைத்துனி ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக ஹுசின் மேலும் தெரிவித்தார்.

அந்த மனிதன் திடீரென்று வெறித்தனமாக ஓடி, பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு பாராங்கால் வெட்டியதாக நம்பப்படுகிறது. சந்தேக நபரின் 5 வயது மற்றும் 2 மாத வயதுடைய இரண்டு சிறு பிள்ளைகள் காயமடையவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் தாயுடன் இருந்தனர் என்று ஹுசின் கூறினார்.

பாதிக்கப்பட்ட நான்கு பேரும் கோட்டா டிங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் அவர்கள் நிலை சீராக உள்ளனர். சம்பவத்திற்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here