மாஸ்க் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அண்யாமல் வெளியே சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

புதுச்சேரி கடற்கரை 10 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.

தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும், பால் விற்பனை மையங்கள் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 23 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here