ஹோட்டலில் கொள்ளையடித்த ஆடவன் பிடிப்பட்டான்

பெட்டாலிங் ஜெயாவில் இயங்கி வரும் ஹோட்டல் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியளவில் வேலை கேட்பதாக நுழைந்த ஆடவர் பணியாளிரிடம் கத்தியை காட்டி கொள்ளையடித்துள்ளார்.

அப்பணியாளரிடமிருந்து 300 வெள்ளியை கொள்ளையடித்து விட்டு அந்த ஆடவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

அதே தினத்தில் இரவு 10.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் பந்தாய் டாலாமில் உள்ள அங்காசா அடுக்குமாடி வீடு ஒன்றில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கொள்ளையில் ஈடுப்பட்ட ஆடவன் பிடிப்பட்டான் என்று ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

அந்த ஆடவன் மீது அதிகமான குற்றச் செயல் பதிவுகள் இருந்துள்ளன. மேலும் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் நிகழ்ந்த 5 கொள்ளை சம்பவங்களில் அவ்வாடவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

அவரின் வீட்டில் விலை உயர்ந்த கைப்பை, கூர்மையான கத்தி, தொலைப்பேசி, கை கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஆடவர் மேல் விசாரணைக்காக 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குற்றங்கள் நிருபனமானால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று நிக் எஸானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here