நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின். இவர் காஞ்சனா 2 படத்தில் ஒரு பாடலுக்கு லாரன்ஸூடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.
இதையடுத்து அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த கடந்த சில வருடங்களாகக் கதை கேட்டு வந்தார்.
இந்நிலையில் எல்வின் பிறந்த நாளான நேற்று, நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.





















