வெள்ள நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக 900க்கும் மேற்பட்ட மலேசிய ஆயுதப் படையினர் தயாராக உள்ளனர்

கோலாலம்பூர், டிசம்பர் 21:

வெள்ள நிவாரணப் பணிகளில் உதவுவதற்காக Op Murni மூலம் சொத்துக்களையும் 919 பணியாளர்களையும் மலேசிய ஆயுதப் படை (MAF) திரட்டியுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், பேராக், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் OP Murni நடவடிக்கை மூலம் வெள்ள நிவாரணப் பணிகளில் உதவுவார்கள் என்று பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ அஃபெண்டி புவாங் கூறினார்.

“OP Murni மீட்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்தில் உதவவும், பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவும் இப்படையினர் உதவுவார்கள். மேலும் நடவடிக்கைக்கு தேவையான ட்ரக்குகள், நான்கு சக்கர வாகனங்கள், படகுகள் மற்றும் ராயல் மலேசிய விமானப்படையின் விமானச் சொத்துக்கள் போன்றவைகளும் திரட்டப்பட்டுள்ளன என்றார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை அனுப்பவும், அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையால் (NADMA) ஒருங்கிணைக்கப்பட்ட பிற பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உதவவும் MAF எப்போதும் தயாராக உள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில், குறிப்பாக அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் முயற்சிகளில் அதிகாரிகளுக்கு உதவ, MAF தனது இரண்டாம் நிலைப் பணிகளைச் செய்ய எப்போதும் உறுதியுடன் இருப்பதாக அஃபெண்டி கூறினார்.

நேற்றிரவு நிலவரப்படி, 61,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களை பதிவு செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here