ஜோகூர் பாரு: இங்குள்ள கங்சார் பூலாயில் ஒரு ஹைப்பர் மார்க்கெட் அருகே ஒரு பெண்ணின் கழுத்து சங்கிலியை பறித்ததாக 18 குற்றப் பதிவுகளுடன் வேலையில்லாத நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை காலை 8.50 மணியளவில் ஹைப்பர் மார்க்கெட்டுக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒருவர் பின்னால் இருந்து வந்து அவரது கழுத்து சங்கிலியை இழுத்ததாக இஸ்கந்தார் புத்ரி உதவி ஆணையர் ஏசிபி துல்கைரி முக்தார் தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து அந்த நபர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் ஓடி தப்பினார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தாமான் யூனிவர்சிட்டியில் உள்ள பட்ஜெட் ஹோட்டலில் இருந்து 31 வயது நபரை போலீசார் நேற்று விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக ஏ.சி.பி துல்கைரி தெரிவித்தார். இரண்டு மொபைல் போன்கள், ஒரு மிட்சுபிஷி கார் சாவி, ஒரு சுத்தி, இரண்டு ஸ்க்ரூடிரைவர்கள், ஒரு பாராங் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படும் என நம்பப்படும் பிற பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
சாலை வரி, இரண்டு கொத்து மோட்டார் சைக்கிள் சாவிகளும் காணப்பட்டன. இந்த பொருட்கள் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. தாமான் பெர்லிங்கில் ஒரு சில்வர் காரும் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று அவர் கூறினார். முத்தியா ரினி மற்றும் தாமான் துங்கு துன் அமீனாவில் திருடப்பட்ட பல வாகனம் மற்றும் திருட்டு வழக்குகளில் இந்த நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.