சென்னை:
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், சென்னை கிண்டி காதிப்பாரா மேம்பாலம் அருகே நடைபெற்ற கார் விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோயம்பேட்டிலிருந்து நகரின் மையப்பகுதியை நோக்கி அமீன் காரை ஓட்டிச் சென்றபோது, பக்கவாட்டுச் சாலையிலிருந்து திடீரென நுழைந்த மற்றொரு கார் மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாகக் காவேரி மற்றும் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.
இவ்விபத்து குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.























