நிலைத்தன்மை இல்லாத அரசியல் சூழல் – நாடாளுமன்றத்தை கலைப்பீர்

நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக நிலைத்தன்மை அற்ற அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆட்சி அமைத்திருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அம்னோ தேசிய துணை தலைவர் முகமட் ஹாசான் வலியுறுத்தினார்.

தற்போது நாடு மந்தநிலையை எதிர்கொள்ளும் அதே வேளையில் வரவு செலவுத் திட்டத் தாக்கல் உட்பட சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது கடினமான ஒரு செயலாக அமைந்துள்ளது.

நிலைமை இப்படி இருக்கையில் மேலும் தாமதிக்காமல் விரைந்து நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று முகமட் ஹாசான் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அனைத்து முயற்சிகளும் ஒரு நிலையான அரசாங்கமும் நாடாளுமன்றமும் இல்லாமல் சாத்தியமாகாது. அதோடு இதே நிலை தொடர்வது ஆரோக்கியமான ஒன்றாக அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கொண்டிருக்கும் அரசாங்கமே சிறப்பாக செயல்பட முடியும். அதோடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் மலேசியாவை மீட்டெடுக்க முடியும்.

மலேசியா ஜனநாயக நாடு. இறுதி தீர்ப்பு மக்கள் கையிலே. நாடு முன்நோக்கி செல்வதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்கள் கையிலேயே கொடுங்கள் என்று முகமட் ஹசான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here