சிரம்பான் மைடின் பாம்பே பஜாரில் இந்திரா வேலி இலவச 100 பக்கெட் பிரியாணி வழங்கியது

­சிரம்பான், தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் வேளையில் சிரம்பான் மைடின் பாம்பே பஜாரில் இந்திரா வேலி தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. முற்றிலும் மலேசிய தயாரிப்பான இந்திரா வேலி பொருட்களை வாங்கி பயனடையுமாறு அதன் தலைமை செயல்முறை அதிகாரி ஜெஸ்சிகா சுப்பையா தெரிவித்தார்.

இந்திரா வேலி பொருட்களான பாஸ்மதி அரிசி, சூரியகாந்தி எண்ணெய் விற்பனைக்கு இருக்கும் வேளையில் புதிய அறிமுகமாக சோயா சாங்ஸை இந்தாண்டு தீபாவளிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு இந்திரா வேலி பாஸ்மதி அரிசி, சூரிய காந்தி எண்ணைய் கொண்டு 100 பக்கெட் பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர். இது குறித்து ஜெஸ்சிகா கூறுகையில்  எங்களின் தரமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரியாணியை சுவைத்து பார்த்த வாடிக்கையாளர்களில் பலர் இந்திரா வேலி பொருட்களை விரும்பி வாங்கி சென்றனர். தரமான இந்திரா வேலி பொருட்களை வாங்கி இவ்வாண்டு தீபாவளியை கொண்டாடுமாறு ஜெஸ்சிகா கேட்டுக் கொண்டார்.

இந்திரா வேலி MASYHUR KE PUNCAK SDN.BHD வழி விற்பனை செய்து வரும் பாஸ்மதி அரிசி 1 கிலோ, 5 கிலோ  எடையிலும் அதே வேளை சுத்தமான சூரியகாந்தி எண்ணெய் 1,2,3 லிட்டர் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்திரா வேலியின் சோயாவை வாடிக்கையாளர்கள் வாங்கி ஆதரவு வழங்குமாறு ஜெஸ்சிகா கேட்டுக் கொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here