மஇகாவுக்கு சொந்தமான தொகுதிகளை ஒப்படையுங்கள்

15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு மஇகாவிற்குச் சொந்தமான பேராங், பாசீர் பாஞ்சாங் மற்றும் ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதிகளை மீண்டும் மஇகாவிடமே ஒப்படைக்குமாறு மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ வி.இளங்கோ கேட்டுக் கொண்டார்.

இந்த மூன்று தொகுதிகளில் மஇகா போட்டியிட்டால் வெற்றி பெறுவது உறுதி என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்று தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்பதோடு அதற்கான வேலைகளை மாநில மஇகா அதிவேகமாகச் செய்து வருகிறது. கடந்த காலங்களில் இத்தொகுதிகளில் மஇகா வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவதன் வாயிலாக பேராக் மாநில அரசாங்கத்தில் இந்திய பிரதிநிதிகள் இடம் பெறுவர்கள். தற்போதைய பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்தியப் பிரதிநிதிகளாக மந்திரி பெசாரின் ஆலோசகர் மற்றும் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக ஓர் இந்தியரும் நியமனம் செய்யப்படவில்லை. இன்றைய அரசாங்கத்தில் மாநில ஜிஎல்சி பதவிகளிலும் இந்தியர்கள் நியமனம் செய்யப்படாதது மிகவும் வேதனையாக உள்ளது என்று டத்தோ இளங்கோ வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், கடந்த கால தேசிய முன்னணி ஆட்சியில் மந்திரி பெசாரின் ஆலோசகர் மற்றும் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரிகளாக மஇகாவினர் நியமனம் செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here