3ஆவது முறையாக நடத்தப்படும் சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி

Our HQ  Reporter :T.Mohan  

சிலாங்கூர் மாநிலத்தின் வான் போக்குவரத்துக் கண்காட்சி புக்கிட் ஜெலுத்தோங் Skypark RACகில் நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையில் இந்த மாபெரும் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

3ஆவது முறையாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சியானது மீண்டும் அனைத்துலக ரீதியிலான இத்துறை சார்ந்தவர்களை ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

முதல் 2 நாட்களுக்கு இந்தக் கண்காட்சியில் இத்துறை சார்ந்தவர்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

3ஆவது நாளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த மாபெரும் கண் காட்சியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதனை INVEST SELANGOR BERHAD ஒருங்கி ணைக்கின்றது.

அதிலும் இந்தப் பிராந்தியத்தில் ஒரே ஒரு வான் போக்குவரத்து வர்த்தக – பொது கண்காட்சியாக இந்த நிகழ்ச்சி விளங்குகிறது. இம்முறை கண்காட்சியில் 6 நாடு களைச் சேர்ந்த 117 தரப்பினர் தங்கள் படைப்புகளைக் காட்சிக்கு வைக்கவுள்ளனர்.

மேலும் இந்த 3 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கண் காட்சிக்கு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவேளை பொதுமக்களி டையே ஆர்வம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் வெள்ளிக்கிழமை மதிய நேரத்திலும் அவர்கள் பங்குபெறலாம்.

இது தவிர சனிக்கிழமையிலும் அவர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்நிலையில் செக்ஷன் 13 ஜயண்ட் பேரங்காடி அருகே உள்ள அரங்கக் கார் நிறுத்தும் இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படும்படி வருகை யாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பின்னர் அவர்கள் சி முகப்பிடத்தில் பதிவு நடவடிக்கைகளை மேற் கொண்டு பின்னர் வருகையை உறுதிப்படுத்தும் கை காப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வாடிக்கையாளர்களின் வருகையை எளிதாக்குவதற்குப் பேருந்து போக்கு வரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி குறித்த மேல் விவரங் களுக்கு @selangoraviationshow, @SelAviationShow (டுவிட்டர்) என்ற சமூக வலைத் தளப் பக்கங்களை நாடுவதோடு www.investselangor.my என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here