வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனி படம் விரைவில் ஜி5 தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.



















