ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்திய ஆடவரை சிங்கப்பூர் தேடுகிறது

ஜோகூர் பாரு: டிரோன் மூலம்  கடத்தல் வழக்கில்  சம்பந்தப்பட்ட போதைப்பொருள் சந்தேக நபர்கள் இருவருமே சிங்கப்பூரின் தேடும் பட்டியலில் உள்ளனர் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர்  டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை  தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் சிங்கப்பூரில்‘ சலகாவ் ’அல்லது‘ கேங் 369 ’என அழைக்கப்படும் ஒரு ரகசிய சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று அவர் நேற்று இங்கு கூறினார்.  ட்ரோன் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்தியதாக இங்குள்ள தாமான் மவுண்ட் ஆஸ்டினில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்கு மாடியில்  “பாய் சேட்டன்” என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மொகமட் அஸ்லி அஹ்மத் சைட் (40) என்பவரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரை விசாரித்த பின்னர் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பின்னர் அதே இடத்தை சேர்ந்த மற்றொரு சிங்கப்பூரரான 41 வயது நபரை போலீசார் கைது செய்தனர். பாய் சேட்டனின் 23 வயது காதலியும் கைது செய்யப்பட்டார்.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு போதைப்பொருள் கடத்த ட்ரோன் பயன்படுத்தியதற்காக இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாக சனிக்கிழமை பெர்னாமா தெரிவித்துள்ளது என்று சிங்கப்பூர் போலீஸ் படை மற்றும் மத்திய போதைப்பொருள் பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவரின் தொலைபேசியிலிருந்து எடுக்கப்பட்ட தகவலின்படி விமானத் தரவு, ஆளில்லா விமானம் கிரான்ஜியில் இருந்து ஜோகூர் பாருவுக்கும், மீண்டும் கிரான்ஜிக்கும் பறந்திருப்பதைக் காட்டியது.

குடி நுழைவு சட்டம் 1959/1963 இன் பிரிவு 15 (1) (சி), ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15 (1) (அ) மற்றும் ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 39 ஏ (1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக  அயோப் தெரிவித்தார். சந்தேக நபர்கள் இருவரும் ஜூலை 7 வரை 14 நாட்கள் ரிமாண்டில் உள்ளனர்.  அவர்கள் மீது மேற்பட்ட  போதைப் பொருள் உட்கொண்டுள்ளனரா என்ற பரிசோதனையில் இருவருமே மெத்தாம்பேட்டமைனுக்கு உட்கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  அவர்கள் இன்னும் அளவுக்கு அதிகமான போதையில் இருப்பதால் அவர்களால் விசாரணைக்கு ஒத்துழைக்க வழங்க முடியாமல் இருக்கின்றனர் என்றார்.

சந்தேக நபர்களிடமிருந்து 37 எக்ஸ்டஸி மாத்திரைகள், 13.6 கிராம் சியாபு மற்றும் 2,590 வெள்ளி மதிப்புள்ள 2.4 கிராம் ஹெராயின் உள்ளிட்ட மருந்துகளை பறிமுதல் செய்ததாக அயோப் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here