தர வரிசை தாழ்த்திவிடாது

ஒன்றன் தரத்தை அதன் வரிசை எண்களால் மதிப்பிடப்படுகிறதா? தகுதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறதா? என்பதில் மக்களுக்கு இன்னும் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன.

பொதுவாகவே இப்படிப்பட்ட சூழலில் எண் வரிசை தவறான தோற்றத்தைத் தந்துவிடும் என்பதற்கு பல்கலைக்கழகங்களின் மதிப்பீட்டு வரிசை உதாரணமாக இருக்கிறது.

சில ஆண்டுக்குமுன் மலாயா பல்கலைக்கழகம் முதல் வரிசையில் நம்நாட்டில் இருந்தது. அதே போல் உலகத்தரத்தில் 59 இடத்தில் இருந்தது. இந்த இடம் உண்மையிலேயே மிகச்சிறந்த இடம் என்பதும் உண்மை. இதனால் மலேசியாவுக்கு தனிச்செல்வாக்கு இருக்கிறது.

இன்றைய நிலை என்ன?

மலேசியப் பல்கலைக்கழகங்களில் இரண்டு  இன்றைய நிலையில் 400 என்ற எண் வரிசையில் இருக்கிறதாம்.  மலாயா பல்கலைக்கழகம் 90 ஆவது நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறதாம்.

இப்படி நடப்பதற்கு என்ன காரணம். முதலில் இந்த தர வரிசை ஏற்புடையதா? கண்கட்டு வித்தையா என்பதில் இன்னும் குழப்பம் இருக்கிறது.

பல்கலைக்கழகங்களின் தரத்தை குலுக்கலில் தேர்வு செயதல்ல. கல்விநிலையை ஆய்வுசெய்தே கணக்கிடப்பட வேண்டும். அப்படிச் செய்யப்படுகிறதா என்பதிலும் வெளிச்சமில்லை.

மலேசியாவின் தனியார் பல்கலைக்கழகத்தின் நிலை 400 இல் இருப்பதும் மிகச்சிறந்ததுதான் என்று பேராசிரியர் பென்னி லிம் என்பவர் கூறியிருக்கிறார். இவர், பெர்ஜாயா பல்கலைக்கழகக் கல்லூரியின் கலைப்பிரிவு பேராசிரியரும் ஆவார்.

பல்கலைக்கழகங்களைத் தரம் கண்டவர்கள் தனி அளவுகோல் கொண்டிருக்கின்றனர். பலதரபட்ட பிரிவுகளுக்கு ஏற்ப விழுக்காட்டு முறையைக் கையாள்கின்றனர். அந்த அடிப்படையில் தர எண் பிரிக்கட்டிருப்பதாக பேராசிரியர் தன் சொந்த கருத்தாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தத் தர எண் வரிசை என்பதில் பலர் மிகத்தெளிவாக இருப்பதால் மலாயா பல்கலைக்கழகத்திறன் தாழ்ந்திருப்பதாக எண்ணமில்லை. சில வேளைகளில் மாற்றங்களும் தொற்று நோய்தன்மையும் காரணமாக இருப்பதையும் தவிர்ப்பதற்கில்லை.

எந்த வகையிலும் மலேசியப் பல்கலைக்கழகங்கள் தழ்ந்துவிடவில்லை. தர எண் என்பது மற்றவர்கள் நம்மை மதிப்பிடுவது. நமக்கு நாமே செய்துகொள்ளும் சுய மதிப்பீடே முதன்மையானதாகும். மற்றவர்களின் மதிப்பெண்கள் வெறும் எண் என்பதாகவே இருக்கும். தரம் என்பதற்கு எது எண்  என்பதுதான் முக்கியம்.

உலகின் உயர்தரத்தில் மலாயா பல்கலைக்கழகம் தொடர்ந்து பெயர் பதித்து வருகிறது என்பதுதான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here