நான், இந்திரா காந்தியின் பேத்தி

பொதுமக்களிடம் உண்மையை பேசவிடாமல் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காத்தியின் பேத்தியுமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிறுமிகள் காப்பகம் ஒன்றில் கொரோனா கோரத்தாண்டவமாடி இருக்கிறது. அங்கு 57 சிறுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம், அத்துடன் 7 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதும் மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்தது.

இதில், ஒருவருக்கு ஆட்கொல்லி நோயான எச்.ஐ.வி. இருப்பதும் உறுதியானது. ஆனால், சிறுமிகள் காப்பகத்துக்கு வரும்போதே கர்ப்பமாக இருந்தனர். இதற்கு ஆதாரங்கள் உண்டு என்கிறது அரசு தரப்பு. விமர்சித்த பிரியங்கா இச்சம்பவத்தை முன்வைத்து உத்தரப்பிரதேச ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதனடிப்படையில் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பிரியங்கா காந்தி தமது பதிவை திருத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிறுமிகள் விவகாரம் விவகாரமாகியிருக்கிறது.

இதற்கு தற்போது பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார். தமது சமூக வலைத்தள பக்கங்களில் அடுத்தடுத்து இந்தி மொழியில் பிரியங்கா காந்தி பதிவிட்டு வருகிறார். அதில், என்னை பல்வேறு துறைகள் மூலம் அச்சுறுத்தலாம் என நினைக்கிறது உத்தரப்பிரதேச அரசு. இப்படியெல்லாம்  பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here