பெண்களுக்கு ஆபத்து..

ஊடுருவிப் பார்க்கும் கேமரா.. அந்தரங்கங்கள் பறிபோகும் அபாயம்!

சீனாவைச் சேர்ந்த கைப்பேசி  நிறுவனம் ஒன்று  செல்போன் வழியாக ‘எதையும்’ ஊடுருவி பார்க்கும் எக்ஸ்ரே வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் இந்த வசதியால் அந்தரங்கம் பறிபோகும் அபாயம் இருப்பதாக அறியப்படுகிறது.

2020 உலகத்தில் எல்லோரிடம் இன்றைக்கு செல்போன் உள்ளது. குறிப்பாக பலரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் எந்த அளவிற்கு சாதகமான அம்சங்கள் உள்ளனவோ அதே அளவுக்கு பாதகமான விஷயங்களும் உள்ளன.

இன்றைக்கு ஒவ்வொருவரும் புதுப்புது மாடல் செல்போன்களை வாங்ப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

டிஜிட்டல் கேமராவில் உள்ள அத்தனை வசதிகளும் இப்போது செல்போனிலேயே  இருக்கிறது. இது மிக முக்கிய காரணம் ஆகும். அத்துடன் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் செய்ய வேண்டிய வேலைகளையும் எளிதில் ஸ்மார்ட்போன்களில் செய்ய முடிகிறது. கையடக்க கணினியாக செல்போன்கள் மாறி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு கைப்பேசி  நிறுவனமும் ஏதேனும் புதிய வசதியை கூடுதலாக சேர்த்தால் மட்டுமே அதை விற்க முடியும் என்ற நிலை சந்தையில் உருவாகிவிட்டது.

இதனால், நவீன வசதிகள் உள்ள செல்போன்களுக்கு உலகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டை பார்த்து பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல வசதிகளை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகின்றன. மக்கள் பலரும் விரும்புவது நல்ல கேமரா வசதி உள்ள போன்களைத்தான். இதற்கு தான் மார்க்கெட்டில்  கிராக்கி அதிகம் . செல்ஃபி மோகமும் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆடைகளை ஊடுருவி புகைப்படம்

பல வசதிகள் வந்துவிட்ட நிலையில், சீனாவைச் சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் இதுவரை எதிலும் இல்லாத புதிய வசதியுடன் ஒரு மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் எக்ஸ்ரே கதிர்களை போன்று, அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ஆடைகளை ஊடுருவி போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்திற்கு வந்திருக்கிறது.

இதைக் கொண்டு கைப்பேசியிலுள்ள கேமிராவை இயக்கி போட்டோ குரோம் கலர் பில்டரை ஸ்வைப் செய்து, கண்ணுக்குத் தெரியாத பொருட்களை போட்டோ எடுக்க புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள ஆப்சனை கிளிக் செய்தால் பார்க்க முடியும் என்கிறார்கள்.

தீயணைப்பு வீரர்கள் அகச்சிவப்பு கதிர்கள் கேமிராக்களை கொண்டுதான் தீப்பற்றிய கட்டிடங்களில் புகை வரும் இடங்களுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால். இதை பயன்படுத்த சில கட்டுப்பாட்டுகள் உள்ளன. எனவே பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய இந்த தொழில்நுட்பத்திற்கு எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here