ஈப்போ:
கெரிக்கில் ஆறு பேருடன் சென்ற ஒரு கார் சாலைத் தடுப்பைத் தவிர்க்க முயன்றதால், அக்கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கெரிக்கிலிருந்து கெடாவின் பாலிங்கில் உள்ள பாலம் வரை சுமார் 70 கிலோமீட்டர் துரத்தலில் பின்னரே போலீசார் அக்காரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் என்று, கெரிக் மாவட்ட காவல்துறை தலைவர் சுல்கிப்லி மாமூட் கூறினார்.
அக்காரில் இருந்த நான்கு மியன்மார் பிரஜைகளை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர், இருப்பினும் மற்றய இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடினர்.
எவ்வாறாயினும், சந்தேக நபர்களில் ஒருவரான, 39 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் பின்னர், கெரிக்-பெங்கலான் உலு பிரதான வீதிக்கு அருகில் கைது செய்யப்பட்டார், அதே நேரத்தில் மற்ற சந்தேக நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.




















