‘தேரோடும் வீதியிலே’ படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஓசரவல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடனும் இந்தியில் ரிஷிகபூர், பரேஷ் ராவலுடன் ‘படேல் கி பஞ்சாபி சாதி‘ படத்திலும் நடித்துள்ளார்.
‘தென்னிந்திய திரை உலகினர் நேர்மையானவர்கள். நான் தேசிய விருது பெற்ற தென்னிந்திய இயக்குனர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகைகளை தெய்வமாக பார்க்கிறார்கள். மரியாதை கொடுக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் சில நடிகைகளுக்கு கோவில் கட்டி வணங்கும் நிலையும் இருக்கிறது. நான் இந்தி படங்களில் வாய்ப்பு கேட்டபோது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் மீது தவறான எண்ணம் இருக்கிறது என்றும் எனவே இந்தி திரையுலகினரிடம் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததாக சொல்லாதே என்றும் சிலர் கூறினர்.
தென்னிந்திய மொழி படங்களில் நடித்து எதிர்காலத்தை கெடுத்திக்கொள்ளாதே என்றும் தெரிவித்தனர். நிஜத்தில் இந்தி சினிமா தென்னிந்திய படங்களைத்தான் நம்பி உள்ளன. அங்கிருந்துதான் பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். எனவே தமிழ், தெலுங்கு நடிகைகளை இந்தி பட உலகினர் தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.“ இவ்வாறு கூறினார்.