பூட்டப்பட்ட ஜாலான் தம்பின் ஸ்ரீ முனிஸ்வரர் கதவின் பூட்டு உடைப்பு !

கடந்த வியாழக்கிழமை இரவு வழிப்பாட்டில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பக்தர்க்களை ஆலயத்திலிருந்து விரட்டியடித்த ஒரு கும்பல், பின்னர் அந்த ஆலயக்கதவை பூட்டு போட்டு பூட்டியது.

அச்செயலை வண்மையாக் கண்டித்த அவ்வாலயத்தின் செயலாளர் கணேசன் கண்ணையா, நேற்று இச்சம்பவம் குறித்து இங்குள்ள செனாவாங் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று செய்திருந்தார். அப்புகாரில் பூட்டப்பட்ட பூட்டை உடைக்கப் போவதாக அப்புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் அவ்வாலய வளாகத்தில் திரண்ட ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் சிலரின் ஆதரவுடன் ஆலயக் கதவின் பூட்டை ஆலயப் பொறுப்பாளர்கள் உடைத்தார்கள்.

கடந்த 2005ஆம் ஆண்டில் இவ்வாலயத்தை அரசாங்கத் தரப்பு உடைக்க முற்பட்டப்போது, அதனை நாங்கள் ஒரு மாபெரும் சக்தியாக கூடி, அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தினார் என கணேசன் கூறினார். அதன் பிறகு பல போராட்டங்களை கடந்து, உடைக்கும் நடவடிக்கையிலிருந்து இக்கோயிலை காப்பாற்றினோம்.

சுமார் 225 ஆண்டு பழமைவாய்ந்த இக்கோயிலை கடந்த 20ஆம் ஆண்டும் சங்க பதிவு இலாகாவில் பதிவு செய்து, புதிய நிர்வாகத்தையும் தேர்ந்தெடுத்தோம். ஆனால் நிர்வாகத்திற்கு தெரியாமல் இந்து சங்க துணையோடு, ஒரு கும்பல் தங்களை புதிய நிர்வாகமாக சங்க பதிவு இலாகாவில் பதிவு செய்துக் கொண்டிருந்த்து எங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

இப்பிரச்சனைக்கு சுமுகமான முறையில் பேசி தீர்க்கும் முயற்சியை மேற்கொண்டார் பல முறை. ஆனால் அத்தரப்பு கோயில் கதவை பூட்டி, பக்தர்கள் இறை வழிப்பாட்டை மேற்கொள்ள தடையாக இருந்து வந்துள்ளார்கள் என குறிப்பிட்டார். இவ்விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுப் போனால், அது நம் சமுகத்துக்குதான் அவமானம்.

இந்த சட்டவிரோத நிர்வாகத்தில் பொறுப்பு வகிப்பவர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்த ஏழு பேர் ஆவார்கள். அவர்கள் அந்நிர்வாகத்தை உடனடியாக கலைத்துவிட்டு, அவசரப் பொதுக்கூட்டம் கூட்டி, இப்பிரச்சனைக்கு சமுகமான தீர்வுக்காண வேண்டும் என அங்கு திரண்டு வந்திருந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்தார்கள்.

ஆலயம் பொது இடம், அங்கு வரும் பக்தர்க்களை விரட்டுஙதற்கும், கதவை பூட்டுவதற்கும் எந்த தரப்புக்கும் அல்லது குடும்பத்துக்கும் உரிமை கிடையாது. இக்கோயிலை போரடி மீட்டு பாதுகாத்து வருகிறார்கள் நாங்கள் என்றும் பக்தர்கள் பொங்கி எழுந்தார்கள்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here