உதவியும் புதிய பதிவும்

தேசிய மஇகாவின் ‘உதவித்’ திட்டத்தின் கீழ் இயங்கலையின் வழி பதிவு செய்து கொண்டவர்கள் உட்பட தொகுதி காங்கிரசின் சார்பாக பதிவு செய்தவர்களையும் சேர்த்து 31 இந்திய குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இவர்கள் தவிர்த்து இரண்டாம் கட்டப் பதிவாக 35 பேரின் பெயர்களை தாங்கள் பதிவு செய்து தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளதாக தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் இளங்கோவன் கெங்கன், மகளிர் பிரிவுத் தலைவி திருமதி பார்வதி காளியப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.

இவர்கள் தவிர்த்து முதல் கட்ட உதவிப் பொருட்களை வழங்கும் போது மேலும் தங்களை பதிந்துகொள்ளாத 40 குடும்பங்களை தாங்கள் பதிவு செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் தனித்து வாழும் தாய்மார்களுக்கான மத்திய அரசாங்கத்தின் 300 வெள்ளி உதவித் திட்டத்திற்கான பதிவையும் தாங்கள் மேற்கொண்டு உதவியதாக இளங்கோவனும் பாரிவதியும் தெரிவித்தனர். மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மாநிலத் தலைவர் டத்தோ ஞானசேகரன், தொகுதித் தலைவர் டத்தோ கமல்ராஜ் ஆகியோருக்கு இளைஞர் மகளிர் பகுதி பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர் என்று மகளிர் செயலாளர் திருமதி லீனாவதி நவனீதன் தெரிவித்தார்.

– கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here