போலி முத்திரையுடன் முறுக்கு தயாரிப்பு

காஜாங் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த ஒரு முறுக்கு பதப்படுத்து நிறுவனத்தை  சிலாங்கூர் இஸ்லாமிய மதத்துறையால் (ஜாய்ஸ்) முற்றுகையிடப்பட்டது. அதன் தயாரிப்புகளின் பொட்டலங்களில்  போலி ஹலால் முத்திரைப்  பயன்படுத்தியதாக இம்முற்றுகையில்  கண்டறியப்பட்டது.

பொதுப் புகார்களைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை (ஜாகிம்), உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் காஜாங் கிளை, மாவட்ட சுகாதார அலுவலகம் (பி.கே.டி) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜாய்ஸ் இயக்குநர் முகமட் ஷாஜிஹான் அகமது தெரிவித்தார்.

மைஹலால் மலேசியா வாசகங்களுடன் இயங்கிய இந்நிறுவனம்  மலேசிய ஹலால் சரிபார்ப்பு சான்றிதழை (எஸ்.பி.எச்.எம்) வைத்திருக்கவில்லை. முறுக்கு பொட்டலங்களில் உள்ள ஹலால் சின்னம் போலியானது என்பதும் தெரியவந்தது.

சிற்றுண்டி உணவு பொருட்கள் வளாகத்திற்கு அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், 24 மணிநேர பேரங்காடிக் கடைகள், உலு லங்காட், செராஸ் மளிகை கடைகளைச் சுற்றியுள்ள மளிகைக் கடைகள், ஈ-காமர்ஸ் தளங்களில் பரவலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரியவருகிறது.

மேலதிக சோதனைகளில் உரிமையாளர் ஒன்பது தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும், அவர்களில் இருவர் மட்டுமே உள்ளூர்வாசிகள், மீதமுள்ளவர்கள் சரியான பணி ஆவணங்கள் அல்லது அனுமதி இல்லாதவர்கள்.

முகமட் ஷாஹிஹான் கூறுகையில், இந்த வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குறிப்பாக முறுக்கு பதப்படுத்தும் பகுதி சுகாதாரமின்மையாக இருப்பதாகக் கூறினார்..

அதன் வணிக பதிவு சான்றிதழை புதுப்பிக்கத் தவறியதற்கும், 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் மூடல் உத்தரவை பிறப்பித்ததற்கும் உலு லங்காட் பி.கே.டி நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here