ஜிஎல்சி நியமனங்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு பின்னடைவை தருமா?

ஜிஎல்சி நியமனங்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை தருமா?

அது யார் யாருக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை பொருத்தே நிர்ணயிக்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

ஜிஎல்சி எனப்படும் அரசு சார்பு நிறுவனங்களில் இயக்குனர்களாகவும் வாரிய உறுப்பினர்களாகவும் பெரிக்காத்தான் நேஷனல் அரசியல்வாதிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பது ஓர் ஆக்கப்பூர்வமான ஆளுமைக்கு முறனாக இருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறை கூறி வருகின்றனர்.

இது தவிர இந்த முதலீட்டு கழகங்கள் மற்றும் துணை நிர்வனங்களில் அரசியல் நியமனங்களானது அதிகார துஷ்பிரியோகம் மற்றும் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதையும் அவர்கள் சுட்டி காட்டினர்.

இந்த குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு தமக்கான ஆதரவை பாதிக்கும் என்பது குறித்து பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கவலை படுவதாக தெரியவில்லை.

இது போன்ற நியமனங்களால் கடந்த காலங்களில் பல்வேறு முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகங்கள் நிகழ்ந்திருப்பதை இந்த அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டினர்.

பதவிகளுக்காக இது போன்ற குறைக் கூறல்களை அரசியல் தலைவர் காதில் போட்டுக் கொள்வதில்லை. அது பற்றி அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்.

முஹிடினின் நிர்வாகம் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே பக்காத்தான் ஹராப்பான் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஜிஎல்சி மற்றும் அதன் துணை நிறுவனங்களின் தலைவர்கள், இயக்குனர்கள் களையெடுக்கப்பட்டனர். அந்த இடங்களில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

தம்முடைய புதிய கூட்டணி பங்காளிகள் விசுவாசம் எந்தளவிற்கு உறுதியானது என்பது முஹிடின் யாசினை பொறுத்த வரை இன்னும் உறுதியாக தெரியவில்லை. மேலும் மிக சிறிய எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் கொண்டுள்ள முஹிடின் யாசின் பலம் பொருந்திய பங்காளிக் கட்சிகளான அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் மோதும் ஆற்றலை கொண்டிருக்கிறாரா என்பதும் ஒரு கேள்விக் குறியே என்று அந்த அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here