மக்களின் ஆதரவுக்கு நன்றி; தேவையான பணத்தை கொடுத்துவிட்டீர்கள்

கோலாலம்பூர்:

பேராசிரியர் இராமசாமி தம்முடைய அறிக்கைகள் வழி ஜாக்கிர் நைக்கிற்கு களங்கம் விளை வித்தார் என குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் சர்ச்சைக்குரிய சமயப் போதகரான டாக்டர் ஜாக்கிர் நைக்கிற்கு பேராசிரியர் இராமசாமி 15 லட்சத்து20 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி உத்தரவிட்டது.

எனவே இந்த தொகையை செலுத்துவதற்கு பேராசிரியர் இராமசாமி மக்களிடம் உதவி கோரினார்.  மலேசியத் தமிழர் குரல் இயக்கம் அவருக்கு உதவ நிதி திரட்டும் நடவடிக் கையை முன்னெடுத்து வந்தது.

இந்நிலையில், இந்த திட்டத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் அவரது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் , இன்று காலை 11 மணி நிலவரப்படி, வழக்குக்கு செலுத்த வேண்டிய 15 லட்சத்து20 ஆயிரம் ரிங்கிட் தமக்கு கிடைத்து விட்டதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பேராசிரியர் இராமசாமிக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here