விடக்கூடாதாம்! ரஜினியின் லேட் ஆவேசம்

சத்தியமா விடக்கூடாது என்று சாத்தான்குளம் விவகாரத்தில்.. ஆவேசம் பொங்க.. கோபம் கொப்பளிக்க.. ஒருவாரம் கழித்து ரஜினி காட்டிய ரியாக்‌ஷன் ரொம்பவும் லேட் என்று மக்கள் ஆணித்தரமாக முடிவே செய்துவிட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது.. தமிழகம் முதல் இந்தியா வரை கொந்தளித்து முடித்துவிட்டார்கள். பல அரசியல் கட்சித் தலைவர்கள் சாத்தான்குளத்துக்கே சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் சொல்லி வந்துவிட்டார்கள்.

ஆனால், ஒரு வாரம் அமைதியாக இருந்தார் ரஜினிகாந்த். இதற்கான காரணமே இப்போது வரை தெரியவில்லை. எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்து கொண்டார் என தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here