கிள்ளான் பள்ளத்தாக்கில் 4 நாட்களுக்கு நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர், கிள்ளான், விலாயா பெட்டாலிங், கோம்பாக், கோல லங்காட் ஆகிய இடங்களில் ஜூளை 14ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நீர் விநியோகத் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கை சிலாங்கூர் ஃபாசா 3 இன் நீர் விநியோக செயல்பாடுகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட விருப்பதால் அதன் செயல்கள் முற்றாக் நிறுத்தப்பட வேண்டியுள்ளது என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் செயல் திட்ட இயக்குனர் அபாஸ் அப்துல்லா தெரிவித்தார்.

நீர் விநியோக முறையை மேலும் மேம்படுத்துவதோடு அதன் வேகக் கட்டுப்பாடு போன்றவற்றை சரி பார்க்க இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோலாலம்பூர், கிள்ளான், விலாயா பெட்டாலிங், கோம்பாக், கோல லங்காட் ஆகிய இடங்களில் ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி ஜூலை 17ஆம் தேதி மாலை 5 மணி வரை நீர் விநியோகத் தடை ஏற்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 16 ஆம் தேதி காலை 9 மணிக்குள் 48 விழுக்காடு நீர் பெறப்படும். அதோடு 17ஆம் தேதி காலை 9 மணிக்கு 80 விழுக்காடு நீர் பெறப்படும்.

எனவே, மருத்துவமனைகள் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையங்களை உள்ளடக்கிய முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் 91 நீர் அடங்கிய லோரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுபப்படும். இன்னும் பல முன் ஏற்பாடுகளை ஆயர் சிலாங்கூர் மக்களுக்கு செய்துள்ளது. இதன் தொடர்பில் விவரங்களை அறிய ஆயர் சிலாங்கூர் அகப்பக்கத்தை மக்கள் நாடாலம் என்று அபாஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here