வனவிருந்து வம்பில் முடிந்தது

குளுவாங் , ஜாலான் டெலிமாவில் உள்ள ஒரு தங்குமிடத்தின் வனப் புறப்பகுதியில் எற்பாடு செய்யபட்ட விருந்தொன்றில் 76 நபர்களை போலீசார் அதிகாலையில்  கைது செய்துள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட 56 ஆண்களும் 20 பெண்களும் அடங்குவர். இவர்களைப்  போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவினர் அதிகாலை 1.30 மணியளவில் இவர்களை  முற்றுகையிட்டனர் என்று மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி முகமட் அப்து இஸ்மாயில் கூறினார். இவர்களில் ​​மூன்று ஆண்களிடமிருந்து சில சட்டவிரோத பொருட்களைப் போலீசார் கண்டுபிடித்தனர்.

அதில்,  ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் 1.85 கிராம் எடையுள்ள கெட்டமின், 1.8 கிராம் எடையுள்ள மரிஜுவானா , 21 பரவசமூட்டும் போதை மாத்திரைகள் இருந்ததாக  ஓர் அறிக்கையில் காவல்துறை  தெரிவித்தது

சந்தேகத்தின் பேரில், தடுத்துவைத்தவர்களில் 28 ஆண்கள்,  10 பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கும் சந்தேகத்தில் ஜூலை 8 வரை ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கலிடமிருந்து ஒலிபெருக்கிக்கருவி, அதற்கான சாதனங்கள், மடிக்கணினி ஆகியவை சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாகவும் முகமட்  அப்து கூறினார்.

வாட்ஸ்அப் வழி தகவல் பெறப்பட்டதின் அடிப்படையில், தனிநபர்கள் காட்டு விருந்து பற்றி தெரியவந்ததாகவும் இதில் கலந்துகொள்ள  ஒவ்வொருவரும் 30 வெள்ளி கட்டணம் செலுத்தியிருப்பதாகவும் தெரிய வந்ததாக காவல் துறை கூறியது.

இதன் தொடர்பில் முகாம் விடுதி நடத்துநர்களுக்கு  தங்கள் வளாகத்தை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களைச் சரியாக அடையாளம் காணப்படவும், போதைப்பொருளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளப் பெற்றொர்கள்  தவறாமல் கண்காணிக்கவும்  அறிவுறுத்தபட்டிருக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here