இந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

சிங்கப்பூரில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், இந்தோனேசியா நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவில் மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின.
இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சாலபிரதேச மாநிலத்தின் டவாங் பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 1.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.4 பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here