கார்களின் தரத்திற்கு ஏற்ப டுரியான் விலையா?

ஒவ்வொரு முறையும்  டுரியன்  பருவத்தில் இருக்கும்போது, ஏமாற்றப்படுவது அதிகமாகிவருகிறது. இதற்கு டுரியான் பருவகால ஏமாற்று என்றும் கூறுகின்றனர்.   ​​

பழங்களை விரும்பி உண்கின்றவர்கள் சிலருக்கே  பழங்களின் தரம் தெரியும்.   தரத்திற்கு ஏற்ற விலையும் இருக்க வேண்டும் என்பதும் நியாயமானதுதான். ஆனாலும், அதிக விலை கொடுப்பதில் பயனீட்டாளர்கள்  எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் கவனிக்கப்படவேண்டும்.

வீட்டிற்கு வந்தவுடன் தான் அவர்கள் வாங்கிய பழங்கள் கூடுதலாகப் பழுத்தவை, அழுகியவை, சுவையற்றவை , வெள்ளை, வளர்ச்சியடையாத சதை என்றெல்லாம் தெரிய வருகிறது. தங்களின் பழச்சுவை கற்பனை கலையும்போது ஏமற்றம் மிகவும் வெறுப்பாக மாறுகிறது.

மலேசிய நுகர்வோர் சங்கத்தின் ஓய்வு பெற்ற (பிபிஎம்எம்) தலைவர் லெப்டினன்ட் கர்னல் சே ஹசான் சே ஜோஹான் கூறுகையில், டுரியான்களுக்கான உச்சவரம்பு விலையை, அவற்றின் தரத்திற்கு ஏற்ப அறிமுகப்படுத்த உரிய நேரம் வந்துவிட்டது என்றார்.

உதாரணமாக, முசாங் கிங் டுரியான், அதற்கு ஏ, பி  சி தரம் உள்ளது. உச்சவரம்பு விலை தரங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும், மேலும் விலை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக விற்கும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என்று அவர் கூறினார்.

சில டுரியான் வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் வந்த கார்களின் வகைக்கு ஏற்ப பழத்தின் விலையை நிர்ணயிக்கின்றனர். ஊடக அறிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

பழங்களுக்கான  பருவகாலத்தில் டுரியான் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என்று சில தரகர்கள் வழங்கிய சாக்குப்போக்குகள், இனி நியாயமானததாக் இருக்காது என்றும் சே ஹசான் கூறினார்.

பழங்கள் வாங்குவோர் பாதிரங்கள் கொண்டுவருமாறு வாங்குபவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார், மேலும் சாப்பிடமுடியாத பழங்களை வாங்குவதில் ஏமாறக்கூடாது என்பதற்காக விற்பனையாளர்களை அந்த இடத்திலேயே பழங்களைத் திறக்கும்படியுமமவர் அலோசனை கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here