சூப்பர்மேன்’ ஸ்டண்ட்

சாலையில் ‘சூப்பர்மேன்’ ஸ்டண்ட் செய்வதன் மூலம் தங்கள் மோட்டார் சைகிள்களைப்  பொறுப்பற்ற, ஆபத்தான முறையில் இயக்கியத்ற்கான  குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு 120 மணிநேரம்  சமூகச் சேவை மேற்கொள்ளுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

துரித உணவு விடுதியின் ஊழியர்களான முகமது அமிருல் இக்மல் அப்துல் ஷாம், 20, முகமது ஜாஹிருடீன் அனுவார் (19) ஆகியோருக்கு மாஜிஸ்திரேட் புத்ரி நர்ஷீலா ரஹிமி தண்டனை வழங்கினார்.

முஹமது ஜாஹிருடீனின் வேலை தகுதிக்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தலா ஒரு ஜாமீனுடன்  2,000வெள்ளி வைப்புத்தொகையை செலுத்தவும், ஓட்டுநர் உரிமத்தை இரண்டு வருடங்களுக்குத் தடுத்து வைத்திருக்கவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கடந்த மே 20 ஆம் தேதி அதிகாலை 12.20 மணி முதல் அதிகாலை 2.23 மணி வரை இங்குள்ள உலு கிளாங் அதிவேக நெடுஞ்சாலையில், (டியூக்) மோட்டார் சைக்கிள்களில் சவாரி செய்யும் போது இருவரும்  சூப்பர்மேன் சாகசம் செய்தாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

வழக்கின் உண்மைகளின்படி, காவல்துறையினரின் ஒப் சாம்செங்  நடவடிக்கையின் போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here