தாமான் செம்பாக்காவில் கைவிடப்பட்ட நிலையில் காலி வீடுகள்.. பிள்ளைகளை அச்சுறுத்தும் பாம்புகள்

ரந்தாவ், தாமான் செம்பாக்காவில் காலி வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அங்கு அடர்த்தியான புதர் மண்டி கிடக்கின்ற நிலையில் இங்குள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நிலையில் பெரும் அச்சுறுந்த்தலை ஏற்படுத்துகிறது.

இதனால் பிள்ளைகள் வெளியில் விளையாட அனுமதிக்கவே பயமாக உள்ளது என்று விக்னேஸ், லோகநாயுடு மற்றும் சேது கூறினார்கள்.

இப்புதர் மண்டிக் கிடக்கும் வீடுகள் பாம்புகள் குடியிருக்க தொடங்கிவிட்டது என கூறும் இளம் தாயான ரா.திலகம்மாள், அப்பாம்புகளின் நடமாட்டம் இங்கு அடிக்கடி காண முடிகிறது என்றும், இங்கு வீட்டு அருகில் ஒன்றுக்கூடி விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை கடித்துவிடுமோ என்றும் ஒவ்வொரு நாளும் பயத்தில் வாழ்கிறோம் என கூறிய அவர், சில தினங்களுக்கு தமது வீட்டு பின்னால், சமயலறை அருகில் கருநாகம் ஒன்று படுத்து கிடப்பதை கண்டு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. இதுப் போன்ற சம்பவங்கள் தமது வீட்டில் மடுமல்ல, இங்குள்ள அண்டை வீடுகளிலும் அடிக்கடி நிலவி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இங்குள்ள கால்வாய்களிலும் புதர் மண்டி, அங்கி கழிவு நீர் சீராக வெளியேற தடையாக இருப்பதாகவும், அதனால் அங்கு நீர் தேக்கம் ஏற்பட்டு, கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியை பெருக்கி கொள்ளும் இடமாக மாறிவிட்டது என கூறுகிறார் திருமதி லெட்சுமி அர்ஜூனன். இதன் காரணமாக ஒவ்வொரு நாள் இரவு நேரங்களில் கொசு கடிகளால் அவதிப்படுகிறோம். நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்புதர்களைச் சுத்தப்படுத்தும் பணியில் இங்குள்ள குடியிருப்பாளர்கள் சிலர் ஒன்றுக்கூடி அவ்வப்போது மேற்கொண்டு வந்துள்ளோம், ஆனால் காடுகள் வீடுகளை மூடும் அளவுக்கு அடர்த்தியாகி விட்டது என ராமநாயுடு கிருஷ்ணன் கூறினார். ஆனால் இதன் வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திற்கு நாங்கள் படும் அவதியை பற்றி கவலைக்கிடையாது.

அதே நிலைதான் இத்தொகுதி மாநகர் மன்ற தரப்பு எங்களின் இந்த அவல நிலையை கண்டுக் கொள்வதில்லை என மனம் குமுறினார்கள் அப்பகுதி குடியிருப்பாளர்கள். ஏற்கனவே இவ்விவகாரம் இங்குள்ள சிலரால் அந்த இரு தரப்புக்கும் புகராக வழகப்பட்டிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here