57 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!

மூவார்:

மூவார், பாரிட் அமாட் லாட் (Parit Amat Laut) பகுதியில், அண்டை நாட்டிற்கு கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்ட 57.15 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பிரம்மாண்ட போதைப்பொருள் விநியோகத்தை கடற்படை போலீசார் முறியடித்துள்ளனர்.

இது தொடர்பாக 63 வயது முதியவர் மற்றும் 43 வயது பெண் ஆகிய இருவர் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து கடல்சார் போலீஸ் பிரிவு2 தலைவர் நூர் அஸ்மான் ஜமால் கூறுகையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகு ஒன்றில் பொட்டலங்கள் ஏற்றப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த இருவர் கையும் களவுமாக பிடிபட்டனர்,” என்றார்.

அங்கு நடத்தப்பட்ட தீவிர சோதனையில், படகினுள்ளும் காரின் பின் பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பின்வரும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:

அவற்றில் ஷாபு (Shabu): 549 கிலோ கிராம், எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள்: 1,91,268, போதைப்பொருள் திரவக் குப்பிகள்: 4,000 என்பன கைப்பற்றப்பட்டன.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகு மற்றும் இரண்டு எஞ்சின்களையும் போலீசார் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here