மனித மூலதனம் மகத்தானது

மனித மூலதனம் உட்பட அனைத்து அம்சங்களிலும் இளைய தலைமுறையின் வளர்ச்சி தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார் .

நாட்டின் வளர்ச்சியில் தொடர்ச்சியை உறுதிசெய்யக்கூடிய தலைமுறையாக இளைஞர்களை அரசாங்கம் கருதுகிறது.   இதனால் கொள்கை மேம்பாட்டுச் செயல்பாட்டில் ஈடுபடுமாறு இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இதன் தாத்பரிய உண்மைகளை உணர்ந்து கொள்வதில், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில், தலைமைத்துவ திறன்கள் வளர வேண்டிய முக்கிய திறன்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு இளைஞரும் நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இளைஞர்கள் தங்களைத் தாங்களே  வழிநடத்தத் தெரிந்திருக்க வேண்டும்  என்றார் அவர்.

தங்களை வழிநடத்தும் திறன் கொண்ட இளைஞர்கள் ஆரோக்கியமற்ற செயல்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமல்லாமல், சமூக, தன்னார்வ சேவை கலாச்சாரத்தின் தீவிர ஈடுப்பாட்டுடன் சமூகத்திற்கு பங்களிக்கக்கூடிய தேசபக்தி குடிமக்களாக மாறவும் வேண்டும் என்று இந்த ஆண்டு பெர்டானா ஃபெலோஸ் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கூறினார் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here