மலேசியத் தொழில் நுட்பம் பயன்படவேண்டும்

எம்.ஐ.சி.சி என்று அழைக்கப்படும் மலேசிய இஸ்லாமிய சேம்பர் ஆஃப் காமர்ஸ் உள்ளூர் தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு விவேக உள்ளூர் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கங்களை, பயன்பாடுகளில் அமைப்புகளில் பயன்படுத்துவதன் மூலம் முன்னுரிமை அளிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன் பொதுச் செயலாளர் அப்துல் மொஹிடின் முகமட் ஷெரீப் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் , டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளைத் தூண்டுவதற்காகத் தகவல் தொடர்பு தகவல் தொழில்நுட்பத்தில் (ஐ.சி.டி) உள்ளூர் தொழில்துறையாளர்ளுக்கு நியாயமான வாய்ப்புகளைத் திறக்கும் என்றார்.

உள்ளூர்  தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பது பொருத்தமானது என்று எம்.ஐ.சி.சி கருதுகிறது, அதே தரத்தையும் செயல்திறனையும் மிகவும் நியாயமான விலையில் வழங்க முடியும்  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

உள்ளூர் உள்ளடக்கம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக உள்ளூர் தொழில்முனைவோருக்கு எப்போதும் நிதி வழங்குவதற்காக எம்.ஐ.சி.சி அரசாங்கத்தைப் பாராட்டினார்.

அமைச்சகங்களிடையே வணிக அளவில் உள்ளூர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நீடித்த தன்மைக்கு வழிவகுக்காவிட்டால் முயற்சி பயனற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கமெண்ட் 1)  உள்நாட்டின் தொழிற்திறன் உள்நாட்டின் தேவைகளுக்குப் பயன்படாவிட்டால் கடலில் கரைந்த பெருங்காயக் கதையாகத்தான் இருக்கும்.

கமெண்ட் 2) மலேசியர்களுக்குத் திறன் ஆற்றல் போதவில்லை, அதனால் அவர்களுக்கு பயிற்சி கூடுதலாகத்தேவை என்று கூறப்படுகிறது. அப்படியானால், அதற்கான பயிற்சிகள் வழங்கும் தரப்புகள் எவை?

கமெண்ட் 3) வெளிநாட்டுச்சந்தைகளில் மலேசியத்தொழில் நுட்பம் ஊடுருவும் நாள் எது?

இன்னும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாக இருக்க முடியாது ? கால விரயம் பொருளாதாரத்திற்கு ஏற்றதல்ல!

கா. இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here