இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்‌ஷா

2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.

இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சமிக்‌ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here