90 வயது மூதாட்டியிடம் பண மோசடி – 8 பேர் கைது

90 வயது நிரம்பிய மூதாட்டியிடம் போலீஸ் அதிகாரி மற்றும் தபால் நிறுவன ஊழியர் என ஏமாற்றி பணம் பறித்த கும்பலை பெட்டாலிங் ஜெயா காவல் துறையினர் கைது செய்தனர் என்று ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தா.

அந்த மூதாட்டி பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்தியிருக்கிறார். அதில் மூன்று வங்கிக் கணக்கின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். அதோடு இதில் சம்பந்தப்பட்ட ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவருமே மேல் விசாரணைக்காக 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி போலீசார் மற்றும் தபால் நிலைய அதிகாரிகளாக நடித்து தொலைப்பேசியின் மூலம் 90 வயது மூதாட்டியிடம் ஒரு கும்பல் 3.83 மில்லியன் வரை பறித்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை தலைவர் நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

பணி ஓய்வு பெற்ற 90 வயது மூதாட்டியிம் தாம் தபால் நிலைய அதிகாரி என்று கூறிய ஒரு நபர், அவரின் பெயரில் உள்ள அடையாள அட்டை, வங்கிக் கார்டுகள் ஈப்போவிலிந்து சபாவிற்கு அனுபப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

அதோடு, பேரா போலீஸ் அதிகாரிகளாக ஹோ மம் ஃபூ மற்றும் இன்ஸ்பெக்டர் ஹெர்மன் லீ ஆகியோரும் அவரிடம் பேசியிருக்கின்றனர். கள்ளப் பணம் பறிமாற்றம் புகாரில் தங்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக பேசியுள்ளனர். இக்குற்றத்தில் தங்களுடன் ஈடுப்பட்ட வங்கியின் முன்னாள் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நீங்களும் கைது செய்யப்பட்டு 45 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவீர்கள் என மிரட்டியிருக்கின்றனர்.

அந்த மிரட்டலுக்கு பயந்து தொலைப்பேசியில் பேசியவர்கள் சொல் படி அவர் நடந்தார். தம்முடைய சேமிப்பு பணத்திலிருந்து 7 வேவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கிட்டத்தட்ட 3.83 மில்லியனை அவர் செலுத்தியிருக்கிறார். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் முறையாக பணத்தை செலுத்தியிருக்கிறார். அதோடு இறுதியாக ஜூன் 15ஆம் தேதி பணத்தை செலுத்தியிருக்கிறார்.

இச்செயலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக இது போன்ற அழைப்புகளுக்கு மக்கள் செவிசாய்காமல் உடனடியாக காவல் துறையை தொடர்புக் கொள்ள வேண்டும்.
வயதானவர்கள், வெளி நடப்புகளை அறியாதவர்கள் ஆகியோரை குறி வைத்து இது போன்ற மோசடி செயலில் சில கும்பல் ஈடுப்பட்டு வருகிறது. எனவே மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நிக் எஸானி கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here