இரண்டாம் பரிசோதனைக்கு வராதவர்கள் மீது எச்சரிக்கை

வீட்டில்  தனிமைப்படுத்தல் (வீட்டு கண்காணிப்பு ஆணை) வழியாகச் சென்ற 532 நபர்கள்,  இரண்டாவது கோவிட் -19 சோதனைக்குச்  செல்லத் தவறியவர்களாகக்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று காவல் காவல்துறைத்தலவர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீட் படோர் தெரிவித்தார்.

கண்டுபிடிக்கப்பட்டவர்களில் சிலாங்கூர் 303 பேர், கோலாலம்பூர் (156), ஜோகூர் (62), சபா (மூன்று), பகாங் , கெடாவில் தலா இரண்டு,  நெகரி செம்பிலான், மலாக்கா, கிளந்தான் ,  சரவாக் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என கண்டுபிடிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சின்  மையத்திலிருந்து (சிபிஆர்சி) இரண்டாவது கோவிட் -19 சோதனைக்குத் திரும்பாத்தால் நாடு முழுவதும் இரண்டாம் சோதனைக்கு உட்படாதவர்களைக் கண்டறியும் வேட்டை தொடங்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில், 532 பேர் கண்டறியப்பட்டனர், இது 92 விழுக்காடு ஆகும், அதே நேரத்தில் 45 நபர்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று அறியப்படுகிறது.

532 நபர்களும் அருகிலுள்ள சுகாதார கிளினிக்குகளில் தங்கள் இரண்டாவது கோவிட் -19 பரிசோதனையை மேற்கொண்டதாக அப்துல் ஹமீட் கூறினார், அவர்களில் 392 பேர் தொலைபேசி மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர், 140 பேர் தங்கள் வீட்டு முகவரி மூலம் தொடர்பு கொண்டனர்.

இரண்டாவது பரிசோதனைக்கு இன்னும் செல்ல வேண்டிய நபர்களுக்கு அருகிலுள்ள சுகாதார கிளினிக்கில் உடனடியாக அவ்வாறு செய்யுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த உத்தரவை தொடர்ந்து மீறுபவர்கள் சட்டம் 342 , பிற விதிமுறைகளின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அப்துல் ஹமீட் எச்சரித்தார்.

ஜூலை 1 ஆம் தேதி,  மூத்த அமைச்சர் (பாதுகாப்பு கிளஸ்டர்) டத்தோஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப், 1காவது நாளில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட 1,472 நபர்கள் தங்கள் கோவிட் -19 சோதனைக்கு இன்னும் செல்லவில்லை என்று கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here